
பொழுதுபோக்கு
பிளாப் படங்களை கொடுத்தாலும் நெல்சன் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்த நெல்சன் விஜய்யை வைத்து இயக்கிய படம் தான் பீஸ்ட்,சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பை பெறவில்லை.இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது.
இதை தொடர்ந்து நெல்சன் அடுத்து ரஜினியின் 169 படத்தை இயக்கவுள்ளார். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு நெல்சனின் மோசமான திரைக்கதையே காரணம் என்று கூறப்படுகிறது.அதனால் ரஜினியின் 169 படத்தில் திரைக்கதையை மட்டும் மூத்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் வடிவமைக்கிறார்.ஆனால் ரஜினியின் 169 வது படத்தை எப்படியாவது மெகா ஹிட்டாக்கும் முயற்சியில் நெல்சன் இறங்கியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க தற்போழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் பிரமாண்டமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். இந்த படம் வெளியாகி 11நாட்களில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
அதனால் லோகேஷ் கனகராஜ்யை புகழ்ந்து வரும் நெட்டிசன்கள் அதே நேரம் நெல்சனை கலாய்த்து மீம் போட்டு வருகின்றனர்.ஆனால் லோகேஷ் மற்றும் நெல்சன் சிறந்த நண்பர்கள் என்பதால் நெல்சனுக்கு ஆதரவாக லோகேஷ் கருத்துக்களை பதிவிட்டார்.
கார்த்தியின் ‘சர்தார்’ படத்துடன் மோதத் தயாராகும் சிவகார்த்திகேயனின் புதுப்படம்!
ஆனால் பிளாப் படங்களை கொடுத்தாலும் நெல்சனின் சம்பளத்திற்கு மட்டும் குறைவில்லை,நெல்சன் இயக்கிய தோல்வியை சந்தித்த பீஸ்ட் படத்திற்கு அவர்வாங்கிய சம்பளம் 10 கோடியாம்,அதை தொடர்ந்து ரஜினியின் 169 படத்திற்கு அவரது சம்பளம் 20 கோடி இருமடங்காக உயர்த்தியுள்ளார்.
