பல மாணவ மாணவிகளின் கனவாக காணப்படுகிறது எம்.பி.பி.எஸ். இதற்காக பலரும் கடினப்பட்டு படிக்கின்றனர். அவர்களுக்கு நீட் நுழைவுத்தேர்வு வைக்கப்படுகிறது. இந்நிலையில் அரசு கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்களில் சேர ஆண்டு ஒன்றுக்கு கல்வி கட்டணமாக ரூபாய் 13 ஆயிரத்து 610 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு பி.டி.எஸ் இடங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 11610 கட்டணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கே.கே நகரில் உள்ள E.S.I மருத்துவ கல்லூரிக்கு மட்டும் கல்வி கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கல்வி கட்டணம் ரூபாய் 3 லட்சத்து 80 ஆயிரம் முதல் ரூபாய் 4 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே வகையில் பி.டி.எஸ் இடங்களுக்கு 250000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் அடுத்த மாதம் பத்தாம் தேதி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் என்றும் கூறப்படுகிறது.