சிறைக்கைதிகளுக்காக மாதம் செலவிடப்படும் தொகை எவ்வளவு தெரியுமா?

கேரளாவில் உள்ள சிறையில் கைதிகளின் உணவுக்காக மாதம் 79 லட்சம் ரூபாய் செலவிடப்படுவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் உள்ள வியூர், புஜாபுரா, கண்ணூர் மத்திய சிறைகள், நெட்டுக்கல் தேரி, செம்மேனி திறந்த வெளி சிறைகளில் உணவு மட்டும் பிற வசதிகளுக்காக மட்டும் 79 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது.

இதைத்தவிர இந்த 5 சிறைகளிலும் உள்ள கைதிகளுக்கு சம்பளம் வழங்க அரசு 75.84 லட்சம் ரூபாயை செலவழித்து வருவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

சிறைக்கைதிகளை கையாள்வதில் கேரள சிறைச்சாலைகள் பல விஷயங்களில் முன்னூதாரணமாக இருந்து வருகின்றன. குறிப்பாக கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக வியூர் சிறையில் டிவி சேனல் ஆரம்பிக்கப்பட்டு, அதில் அவர்கள் நடிக்கும் நாடகங்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

அதேபோல் இங்குள்ள சிறைக்கைதிகள் தயாரித்த பிரியாணியை பிரபல ஆன்லைன் நிறுவனம் மூலமாக விற்பனை செய்ததும் இணையத்தில் பாராட்டுக்களை குவித்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment