ஒரு கிலோ மல்லிகைப்பூ 2600 ரூபாயா? இரண்டு நாட்களில் மட்டும் எவ்வளவு விலை உயர்வுன்னு தெரியுமா?

நம் தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் பெரும் இன்னல்களுக்கு மக்கள் சிக்கியுள்ளனர். சந்தைகளில் காய்கறிகளின் விற்பனை விலை அதிகளவில் காணப்பட்டது.

மல்லிகை

இதனால் மக்கள் காய்கறிகள் வாங்க கூட தயங்கும் நிலையில் காணப்பட்டனர். ஏனென்றால் பெரும் மழையால் காய்கறிகள் அனைத்தும் நஷ்டம் அடைந்தது வியாபாரத்தை பாதித்தது. இந்த நிலையில் பூக்களின் விலையும் இரு மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூபாய் 2600 ஆக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. கடும் பனிப்பொழிவு மற்றும் தொடர் சுபமுகூர்த்த தினங்கள் காரணமாக பூக்கள் விலை கடும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் மல்லிகை பூ விலை கிலோவிற்கு ரூபாய் 1100 ரூபாய் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளனர். ஒரு கிலோ பிச்சிப் பூவின் விலை ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூ 1600 ஆக அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாமரை, ரோஜா, வாடாமல்லி, செவ்வந்தி என அனைத்து பூக்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment