ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!

தமிழகம் மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதுவும் சாதாரண மழை இல்லைங்க மிக கனமழை. பல இடங்களில் ஊருக்குள் மழை நீர் புகுந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டும் உள்ளது. மேலும் இந்த மழை வெள்ளத்தால் பல மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்த கனமழை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இவ்வளவு நாட்களாக தக்காளி விலை உயர்வை மட்டும் பேசி வந்த நாம் பூக்களின் விலை உயர்வை கண்டுகொள்ளவே இல்லை. அதனால் தானோ என்னவோ மல்லிகைப்பூவின் விலை சத்தமில்லாமல் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பூக்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் பூக்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதுவும் சாதாரண விலை உயர்வு இல்லைங்க. விண்ணை தொடும் அளவிற்கு விலை உயர்ந்து காணப்படுகிறது.

அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் கடந்த வாரம் வரை கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ தற்போது 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுமட்டும் இல்லைங்க இன்னும் இருக்கு.
300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி பூ 800 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி 400 ரூபாய்க்கும், செண்டு பூ 150 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 250 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 150 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை வரலாறு காணாத அளவிற்கு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் விலை மட்டுமல்ல காய்கறிகள், பழங்கள் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment