பலருக்கும் கவர்மெண்ட் வேலை போகிறது ஒரு லட்சியமாகவே காணப்படுகிறது. ஏனென்றால் கவர்மெண்ட் வேலைக்கு சென்றுவிட்டால் மாதம் தவறாமல் சம்பளம் கிடைக்கப்படும். அதோடு ஒவ்வொரு விழாக்களுக்கும் போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வும் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்.
இந்த சூழலில் நம் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் கோவில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதைத் தொடர்ந்து கோவில் பணியாளர்களுக்கும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
ஜனவரி 1 2022 ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்த்தப்படுவது ஆக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவில் பணியாளர்களுக்கான பொங்கல் போனசை ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி நாள் முதல்வர் ஸ்டாலின்.
இதனால் கோவில் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போனஸ் 2000 ஆக உயர்த்தப்பட்டு மட்டுமில்லாமல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது அவர்கள் மத்தியில் பெரும் சந்தோசத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.