தமிழகம்
உங்க ஊர்ல எவ்வளவு வெயில் வெளுத்தது என்று தெரியனுமா? கீழே பாருங்க….
நம் தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் காலம் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதுவும் குறிப்பாக மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகின்ற ஊட்டியிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்ததுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் இன்று பதிவான வானிலை நிலவரம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. அதேவேளையில் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.
மலைகளின் அரசியான ஊட்டியில் அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.
கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெயிலின் தாக்கம் இன்று பதிவாகியுள்ளது.
மதுரையில் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெயிலும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெயிலும் இன்று ஒரே நாளில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.
திருச்சியில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. அதேவேளையில் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெயில் இன்று பதிவானது. கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெயிலும் குறைந்தபட்சமாக இருப்பதில் அடிக்கடி செல்லும் பதிவாகியுள்ளது.
