ஒட்டகப்பால் டீ குடிச்சிருக்கீங்களா? இப்போ நம்ம ஊர்லயே கிடைக்குது…!

பொதுவா நம்ம எல்லாருமே மாட்டு பால்ல டீ அல்லது காபி போட்டு குடிப்பது வழக்கம். அதுமட்டும் இல்லாம நம்ம பகுதிகள்ல பெரும்பாலும் மாட்டு பால் தான் கிடைக்கும். ஆனா சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில இருக்குற கடையில ஒட்டகப்பால்ல டீ காபி தயாரிச்சு விற்பனை செய்யறாங்கனு சொன்னா உங்களால நம்ப முடியுதா? ஆமாங்க உண்மையாவே அங்க ஒட்டகப்பால்ல தான் டீ காபி தயார் செய்யறாங்களாம்.

பார்த்திபன் முரளி நடிப்புல வெளியான வெற்றி கொடிகட்டு படத்துல நடிகர் வடிவேலு துபாயில இருந்து சொந்த ஊருக்கு வந்துட்டு அங்க இருக்குற ஒரு டீ கடையில ஒட்டகப்பால்ல டீ போட சொல்லி பிரச்சனை பண்ணுவார் இல்லையா? அந்த காமெடிய நம்ம யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

ஒருவேளை அந்த படத்தை பார்த்திட்டு தான் இந்த கடைக்காரருக்கு இப்படி ஒரு ஐடியா வந்திருக்குமோ? ஓகே அதெல்லாம் நமக்கு எதுக்குங்க இப்போ ஒட்டகப்பால்ல ஏன் டீ போடறாங்கனு தெரிஞ்சுக்கலாம் வாங்க. மாட்டுப்பாலில் இருப்பதைவிட ஒட்டகப் பாலில் அதிக சத்துக்கள் மற்றும் எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளதால் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக ராஜஸ்தானில் இருந்து ஒட்டக பாலை உடனடியாக குளிரூட்டி, சுமார் 48 மணி நேரத்தில் சேலம் கொண்டு வரும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்களாம். மேலும் ஒட்டகப் பாலில் டீ, காபி மட்டுமல்ல மில்க்‌ஷேக்கும் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்களாம்.

இந்த ஒட்டகப்பால், மாட்டுப் பாலை விட கெட்டித்தன்மை கொண்டதாகவும், சிறிது உப்பு சுவை கூடுதலாகவும் இருப்பதால் ஒட்டகப்பாலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம். அதுமட்டும் இல்லைங்க குழந்தைகளும் விரும்பி குடிப்பதால் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறதாம். அப்பறம் என்னங்க நீங்களும் ஒரு எட்டு போய் சாப்பிட்டு வந்துருங்க.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment