எவ்வளவோ பார்த்தாச்சு…. இன்னும் நடக்கலையா…? மூன்றே மாதத்தில் திருமணம் நிச்சயமாக இந்தப் பரிகாரம் செய்து பாருங்க..

எத்தனையோ இடத்துல பெண் பார்த்தாச்சு. மாப்பிள்ளையும் பார்த்தாச்சு. இன்னும் எந்த வரனும் சரியா அமையல.. அப்படின்னு எத்தனையோ பெற்றோர்கள் சொல்லி வருத்தப்படுறாங்க. பிள்ளைகளும் தனக்கு வயது ஏறிக்கொண்டே போகுது… திருமணம் இன்னும் நடக்கலையே என மனம் வருந்துவர்.

இவர்கள் திருமணத் தடை நீக்க பல கோவில்களுக்கும் சென்று இருப்பர். பல பரிகாரங்களும் செய்து இருப்பர். ஆனால் நாள்கள் கடந்து கொண்டே… போய்… வருடங்களும் கடந்து கொண்டு இருக்கும். இதற்கு என்ன செய்வது என்று கவலைப்படுபவர்கள் இந்தப் பரிகாரத்தை செய்து பாருங்கள். கைமேல் பலன் கிடைக்கும். அது என்ன என்று பார்ப்போமா…

திருமணம் நடக்க உதவும் இந்த 3 பொருட்கள் தான். இதை உங்கள் தலையைச் சுற்றி போட்டு விட்டாலே போதும்.

பல பேருக்கு நல்ல வேலை, சொந்த வீடு, நல்ல எதிர்காலம், வாகனம் சொத்து சுகம் எல்லாம் இருக்கும். ஆனால், இதை எல்லாம் அனுபவிப்பதற்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருவார்கள்.

Lotus
Lotus

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு திருமண வயதைக் கடந்தும், திருமணம் ஆகவில்லை என்றால் இதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கும் வருத்தம் இருக்கும்.

குறிப்பாக, அந்த பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு தீர்க்க முடியாத மனக் கவலை இருந்து வரும். நம் குடும்பத்திற்கு அடுத்த வாரிசு வருமா என்ற சந்தேகம் இருப்பவர்களும், இந்த பரிகாரத்தை செய்யலாம்.

நாட்டு மருந்து கடைகளில் விற்கும் இந்த மூன்று பொருட்களை வாங்கி, பரிகாரத்தை முறையாக செய்யலாம்.  48 நாட்களில் இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு, திருமணம் நிச்சயம் என்ற நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்ய தொடங்குங்க.

Aavaram poo
Aavaram poo

அந்த 3 பொருட்களில் முதலாவது லோஅத்திரைப்பட்டை அல்லது இதை லோத்திரைபட்டை என்று சொல்லுவார்கள். இரண்டாவதாக ஆவாரம்பூ, மூன்றாவதாக தாமரை பூ இதழ்கள்.

ஆவாரம் பூ காய்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை. தாமரை பூ இதழ்கள் காய்ந்தது இருந்தாலும் பரவாயில்லை. தவறு ஒன்றும் கிடையாது. இந்த 2 பூக்களும் வாடாமல் புதியதாக கிடைத்தாலும் ஓகே தான்.

ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இந்த மூன்று பொருட்களையும் வைத்து ஒரு நூல் போட்டு சிறிய முடிச்சு போல கட்டி வைத்துக் கொள்ளுங்கள். தயார் செய்த இந்த மூட்டை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே ஒரு அலமாரியில் இருக்கலாம்.

Theepam
Theepam

தினமும் காலை எழுந்தவுடன் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, இந்த முடிச்சை உங்களது உச்சந்தலையில் ஒரு 30 வினாடிகள் வைத்து, மனதார உங்களுக்கு இருக்கக்கூடிய தோஷம் நீங்க வேண்டும், திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மீண்டும் அந்த முடிச்சை உங்கள் முன்பாக ஒரு தட்டின் மீதோ அல்லது ஒரு சிறிய கிண்ணத்தின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள்.

திருமணமாகாத ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களுக்கு பரிகாரம் செய்ய முடியாத மாதவிலக்கு நாட்களில், அந்த நாட்களை தவிர்த்துக் கொண்டு மீண்டும் தொடரலாம். அதில் தவறு ஏதுமில்லை. அதன்பின்பு, வாசனை மிகுந்த பத்தியை ஏற்றி இந்த முடிச்சுக்கு காண்பிக்க வேண்டும்.

அடுத்தபடியாக இருகைகளையும் கூப்பி இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம் ஐம்
ஐம் ஸ்ரீம் க்லீம் ஐம் ஓம்

அவ்வளவுதாங்க, 48 நாட்கள் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். 48வது நாள் இந்த பூஜை நிறைவடையும். இப்போது, உங்களுடைய வீட்டில் சாம்பிராணி புகை போடும் தூபக்காலில் நெருப்பு மூட்டி விட்டு, அந்த மஞ்சள் நிற முடிச்சை லோத்திரப்பட்டை, ஆவாரம் பூ, தாமரை இதழ், கொண்ட முடிச்சை அந்த நெருப்பில் போட்டு, 2 ஸ்பூன் நெய் விட்டு அக்னி ஹோமம் நடத்தி விடுங்கள். முடிச்சை அவிழ்க்க வேண்டாம். முடிச்சோடு போட்டு ஹோமம் நடத்தி விடலாம்.

Thoopam
Thoopam

பூஜை அறையில் இந்த ஹோமம் செய்து நிவர்த்தி செய்து விட்டால், உங்களுடைய தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகி, திருமணம் உங்களுக்கு கூடிய விரைவில் நிச்சயிக்கப்படும்.

உங்களுடைய ஜாதக கட்டத்தில் பிரச்சினை மிகவும் வலிமையாக இருந்தால் கூட 3 மாதத்திற்குள் உங்களுக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும். எத்தனையோ பரிகாரங்கள் செய்தாயிற்று. இதையும் தான் செய்து பார்த்து விடுவோமே.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews