இவர்களுக்கு 1000 ரூபாய் கிடையாதா? ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!

2023 ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் ரூபாய் 1000 ரொக்க பணம் அதனுடன் 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உததரவிட்டுள்ளார்.

தைப்பொங்கல் என்றாலே மக்கள் நினைவிற்கு முதலில் வருவது செங்கரும்பு மட்டும் தான். அந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு இடம் பெறாதது ,செங்கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் தலையில் இடி விழுவது போல் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன கருத்துக்களை தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தை பொங்கல் சிறப்பு கொண்டாட்டமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடுமபத்தினருக்கு ரூபாய் 1000 ரொக்க பணம் அதனுடன் 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 2 , 2023 அன்று சென்னையில் அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: ராகுல் யாத்திரையில் கமல் பங்கேற்பு!!

ரூபாய் 1000 ரொக்க பணம் அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். சர்க்கரை அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இந்த பணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.