தமிழகம்
வீடுகள்தோறும் வருகிறதா ’ஸ்மார்ட் மின் மீட்டர்’கள் ..?
வீடுகளில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கான நிதியை திரட்ட தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் இரு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு மின் நுகர்வோர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. வீடுகள்தோறும் இருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு 19 ஆயிரத்து 35 கோடி தேவைப்படுகிறது.
மேலும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இழப்பை கணிசமாக குறைப்பதற்கு 9 ஆயிரத்து 66 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்தப் பெரும் நிதியை திரட்ட வேண்டும் எனில் இரண்டு மாத மின் கணக்கீட்டிற்கு பதிலாக மாதாந்திர மின் கட்டணத்திற்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மாற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது.
மாதாந்திர முறையில் மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் வசூலிக்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது. ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஒருவேலை தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாதாந்திர மின்கணக்கீட்டு முறைக்கு அமல்படுத்தப்பட்டால் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் மாற்றப்படும் என கூறுகிறார் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மூத்த அதிகாரி. இல்லாவிட்டால் பெரிய வருவாய் இழக்க நேரிடும் என அவர் கூறுகிறார்.
