உக்ரைன் மக்கள் யாரும் கவலைப்படாதீங்க! அடுத்தடுத்து உதவும் நாடுகள்.!! அதுவும் வான்படைக்கு இவ்வளவு உதவிகளா?
தற்போது ரஷ்யா உக்ரைன் நாட்டில் உள்ள மரியுபோல் நகரை கைப்பற்றி உள்ளது. இதனால் ஜெலன்ஸ்கி அங்குள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்றும் தாமதம் செலுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டுக்கு உதவ அமெரிக்கா மற்றும் நார்வே நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் விமானப்படையில் மீண்டும் 20 அமெரிக்கா விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தகவல் அளித்துள்ளது.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு வான் படையை இழந்துள்ளதால் வலிமை சேர்க்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நூறு வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப உள்ளதாக அறிவித்தார் நார்வே பாதுகாப்பு அமைச்சர்.
பிரான்ஸ் தயாரிப்பான மிஸ்டரல் குறுகிய தூர ஏவுகணைகள் உக்ரைனுக்கு பெரும் பயன் அளிக்கும் என்றும் நார்வே பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே 4000 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் நார்வே தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது
