ஊரடங்கை காரணமாக கொண்டு மோசமாக தாக்கக்கூடாது! காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

தொடர்ந்து நம் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக கொரோனாவின் பாதிப்பு குறையும் என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு மாநில அரசும் இத்தகைய கடினமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

நம் தமிழகத்திலும் நேற்றைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த காலகட்டத்தில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடினமாக காவல்துறையினர் கண்டிப்பார்கள். அதோடு காவல்துறையின் கடினமான தாக்குதல் வீடியோவாக இணையதளத்தில் பரவி கொண்டு வரும். இந்த சூழலில் காவல்துறையினருக்கு ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பால், வினியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு உடனே அனுமதிக்கவும் காவல்துறை தமிழக அரசு கூறியுள்ளது. வாகன சோதனையின் போது மக்களிடம் கணிவாகவும், மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று டிஜிபி அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment