கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது! தமிழ்நாட்டுக்கு வெளியே அமைப்பதுதான் பொருத்தம்: ஓபிஎஸ்
தமிழகத்தில் ஆரம்பம் முதல் இன்று வரையும் மிகப்பெரிய பிரச்சனையாகவும் தொல்லையாகவும் காணப்படுவது கூடங்குளம் தான். ஏனென்றால் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் ஒன்று உள்ளது.
இங்கு இருந்து அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கூடங்குளத்தில் அணு கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க முடிவெடுத்துள்ளதாக ஒன்றிய அரசு கூறியிருந்தது.
இதற்கு அன்றைய தினமே பல அரசியல் பிரமுகர்கள், கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து கருத்து கூறியுள்ளார்.
அதன்படி கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அணுக்கழிவு மையம் அமைப்பதை தமிழ் நாட்டுக்கு வெளியில் அமைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பன்னீர்செல்வம் கூறினார். அணுக்கழிவு மையம் அமைப்பதை ஆரம்ப கட்டத்திலேயே எதிர்க்காமல் திமுக அரசு மவுனம் காப்பது ஏன்? என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
