பாறை,மண்சரிவு காரணமாக மலைரயில் தற்போதைக்கு இயக்கப்படாது!

நம் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் அதிதீவிரமாக காணப்படுவதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மழை நீர் சாலைகளில் புரண்டு ஓடுகிறது.தமிழகத்தில் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரிக்கின்றது. மலைரயில்

இதன் மத்தியில் மலைப்பகுதியில் தொடர்ந்து மண்சரிவு, பாறை உருளுதல் போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிறது. மலைப்பகுதிகளில் மலைச்சரிவுகள் அதிகம் ஏற்படுகிறது.

இதனால் மலைப்பகுதியில் மலைரயில் தற்போதைக்கு இயக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பயணிகளின் நலன் கருதி குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை மலை ரயில் சேவை தற்போதைக்கு இயக்கப்பட மாட்டாது என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

குன்னூர்  ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் சேலம் கோட்ட ரயில்வே பொது மேலாளர் கௌதம் சீனிவாசராவ். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதன்படி மழை காரணமாக அடிக்கடி பாறைகள், மண் சரிந்து தண்டவாளத்தில் விழுவதை அடுத்து தற்போது மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் பேட்டியளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment