போலி விவசாயி வேடத்தை ரிப்பீட் செய்ய வேண்டாம்!! எடப்பாடிக்கு எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதிலடி!

நேற்றைய தினம்  வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி இளைய சமுதாயத்தினர் விவசாய தொழில் தொடங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

டிஜிட்டல் விவசாயம்,  உணவு பூங்கா உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு நிதியினை அறிவித்தார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக காணப்படுகிறது என்று கூறினார்.

இந்த நிலையில் அவரின் கருத்து தற்போது தமிழகத்தின் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கருத்து கூறியுள்ளார். அதன்படி விவசாயிகள் வேடத்தை ரிப்பீட் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.

போலி விவசாய வேடத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ரிப்பீட் செய்ய வேண்டாம் என்று எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டதாக ஈபிஎஸ் கூறியது கண்டனத்துக்குரியது என்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

வேளாண் நிதி நிலை அறிக்கையை கண்டு எடப்பாடிபழனிசாமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment