இரண்டு தினங்களுக்கு முன்பு இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிராக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 105 தமிழக படகுகளை ஏலத்திற்கு விட உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ளவர்கள் பலரும் வன்மையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
105 மீன்பிடி படகுகளை இலங்கை அரசு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை ஏலத்தில் விடுவது வேதனை தருகிறது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .மோடிக்கு மட்டுமின்றி வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க கோரிக்கை வைத்துள்ளார். இலங்கையை சேர்ந்த அவர்களால் நடத்தப்படும் தாக்குதலால் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் நிகழ்கிறது என்றும் முதல்வர் கூறினார்.
தாக்குதல் விவகாரத்தில் இந்திய அரசு வாய்மூடி மௌனமாக இருக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களின் உரிமை கொள்ளையடிக்கும் சேதப்படுத்தும் செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.