
தமிழகம்
அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளியே போகாதீர்கள்: வானிலை மையம் எச்சரிக்கை!!
கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன் படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
அதே போல் திருவாரூர், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
