Connect with us

அது வேற, இது வேறப்பா! பாஜக வெளியேறி விட்டது என்று தவறாகச் சொல்லாதீர்கள்: எதிர்க்கட்சித் தலைவர்

ஈபிஎஸ்

Tamil Nadu

அது வேற, இது வேறப்பா! பாஜக வெளியேறி விட்டது என்று தவறாகச் சொல்லாதீர்கள்: எதிர்க்கட்சித் தலைவர்

அது வேற, இது வேறப்பா! பாஜக வெளியேறி விட்டது என்று தவறாகச் சொல்லாதீர்கள்: எதிர்க்கட்சித் தலைவர்

இன்று காலை பாஜக அதிமுக இடையே இழுபறி முடிவுக்கு வந்தது. ஏனென்றால் இன்று காலை பாஜகவினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக செய்தியாளர்களை சந்தித்து கூறினர்.

அதோடு இன்றைய தினம் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்படும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இருப்பினும் அதிமுகவுடன் ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக தொடரும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அதிமுக, பாஜக தனித்து போட்டியிடுகிறோம் என்று பழனிசாமி கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருமா என்ற கேள்விக்கு அது வேற, இது வேற இது உள்ளாட்சித் தேர்தல்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார். பாஜக  வெளியேறி விட்டதா என்ற கேள்விக்கு வெளியேறி விட்டது என தவறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்வோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top