Connect with us

அடுத்த 3 நாட்களுக்கு பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்! வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!!

dry weather 1

தமிழகம்

அடுத்த 3 நாட்களுக்கு பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்! வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!!

அடுத்த 3 நாட்களுக்கு பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்! வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் காலம் மெல்ல மெல்ல தொடங்கிவிட்டது. அதுவும் குறிப்பாக இன்னும் சில நாட்களில் ஏப்ரல், மே மாதம் நெருங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

இதனால் பல இடங்களில் உஷ்ணமான  சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் மற்றுமொரு மக்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட தொடங்கிவிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top