நாளை என்னை யாரும் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூற வேண்டாம்!: முதலமைச்சரின் வேண்டுகோள்;

நாளைய தினம் உலகமெங்கும் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு நாடும் மும்முரமாக தயார்படுத்திக் கொண்டு வருகிறது. இந்த புத்தாண்டு கொண்டாட்டம் இன்று நள்ளிரவு முதலே தொடங்கிவிடும். ஆனால் நம் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு  அடுத்தடுத்து கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

நம் தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரைகளில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் தொண்டர்களுக்கு சில வேண்டுகோள்களை வைத்துள்ளார்.

அதன்படி புத்தாண்டன்று என்னை நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஒமைக்ரான் மற்றும் கொரோனா வேகமாக பரவுவதால் புத்தாண்டன்று என்னை நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக கட்சி தொண்டர்களுக்கு இத்தகைய வேண்டுகோளை முன்வைத்துள்ளார். திமுக தொண்டர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். முதலமைச்சரின் இத்தகைய வேண்டுகோள் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்றுக்கொண்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment