Connect with us

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது!:உலக சுகாதார அமைப்பின் அதிகாரி

blind restrictions to control the corona

செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது!:உலக சுகாதார அமைப்பின் அதிகாரி

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது!:உலக சுகாதார அமைப்பின் அதிகாரி

2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகமெங்கும் கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் 2019ஆம் ஆண்டு தான் உலகில் கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் ஒவ்வொரு நாடும் தங்களது நாடுகளில் கொரோனா பரவல்களை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு போன்ற பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வந்தன.

இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில் கண்மூடித்தனமான கட்டுப்பாடுகள் வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

ofrin

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரோட்ரிகோ ஆப்ரின் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும் ரோட்ரிகோ ஆப்ரின் கூறினார். கொரோனா தொற்று காலத்தில் செய்ய வேண்டியவற்றையும் செய்யக் கூடாதவையும் பின்பற்றினாலே ஊரடங்கு ஒன்று தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரோட்ரிகோ ஆப்ரின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top