தொடர்ந்து மூன்றாவது நாளாக உக்ரைன் நாட்டில் போர் நடத்தபடுகிறது. இந்த போரின் காரணமாக அங்குள்ள மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். அதுவும் குறிப்பாக மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் பதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் உள்ள இந்தியர்கள் எல்லைக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.
அதன்படி உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உரிய அறிவுறுத்தல் இல்லாமல் எல்லைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகளிடம் உரிய ஆலோசனை நடத்தி விட்டு உக்ரேனில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கீவ் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு வேண்டுகோள் வைத்துள்ளது. உக்ரேன் எல்லைப் பகுதிகளில் நிலவும் சூழல் மிகவும் பதற்றமானதாக காணப்படுகிறது என்றும் இந்திய தூதரகம் கூறுகிறது.
இந்தியர்களை மீட்க அண்டை நாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது. முன்கூட்டியே தகவல் அளிக்காமல் எல்லைக்கு செல்லும் இந்தியர்களை மீட்பது தான் சிக்கல் உள்ளதாக இந்திய தூதரகம் தகவல் அளித்தது.
உக்ரேனின் மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதால் அங்கே தங்குவது பாதுகாப்பானது என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.