மாற்றுத்திறனாளி வீராங்கனைகளிடம் பாரபட்சம் கூடாது!: உயர்நீதிமன்றம் உத்தரவு;

நம் தமிழகத்தின் முதன்மை நீதிமன்றமாக கருதப்படுகின்ற சென்னை உயர்நீதிமன்றம் நாள்தோறும் பல்வேறு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வரும். அதன் வரிசையில் மாற்றுத்திறனாளி  விளையாட்டு வீராங்கனைகளை பற்றி சில அறிவுறுத்தல்களை கூறியுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளி வீராங்கனைகளிடம் பாரபட்சம் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்

மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை பாரபட்சமாக நடத்துவதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. செவித்திறன் குன்றியோருக்கான தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய கருத்தினை கூறியது.

மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை பாரபட்சமாக நடத்துவதை தடுக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அனைத்து மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்க செய்ய ஒன்றிய மற்றும் மாநில அரசு தவறிவிட்டது என்றும் உயர்நீதிமன்றம் கூறியது. விளையாட்டு வீராங்கனைகளை, விளையாட்டு வீரர்களுக்கு சமமாக நடத்த வேண்டும் என கூறி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment