காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

நம் தமிழகத்தில் உள்ள பல அணைகள் நிரம்பியுள்ளதால் உபரிநீர் அதிக அளவு மக்கள் அதிக அளவு திறக்கப்படுகிறது. இதனால் அதன் அருகே உள்ள கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

மேட்டூர் அணை

இந்த நிலையில் காவிரி ஆற்றில் தற்போது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதன்படி மேட்டூர் அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி ஆற்றில் குளிக்க மற்ற செயல்பாடுகள் கரைகளுக்கு வரக்கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேட்டூர் அணையின் இரு கரைகளிலும் 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

12 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை அணை நிலவரம் குறித்து தகவல் அளிக்கப்படுகிறது என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இது நிலையில் தற்போது 117.61 அடி தண்ணீர் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment