ஆடம்பரம் வேண்டாம்… எளிமை போதும்…. மணமக்களின் வித்தியாசமான ஆசை…..

இன்றைய காலத்தில் திருமணம் என்பது மிகவும் பிரம்மாண்டமாக ஒரு திருவிழா போன்று நடத்தப்பட்டு வருகிறது. ஆடம்பர உடைகள், தங்க நகைகள் என திருமணத்திற்காக அவர்கள் செய்யும் ஏற்பாடுகள் ஏராளம். அதுமட்டுமல்ல புதுமண தம்பதிகள் பயணம் செய்ய பிரத்யேக ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.

திருமணம்

என்னதான் இப்படி தடபுடலாக ஏற்பாடு செய்தாலும் ஒரு சில தம்பதிகள் வித்தியாசமாக மாட்டு வண்டியில் பயணம் செய்ய ஆசைப்பட்டு பயணம் செய்த சம்பவங்களை எல்லாம் நாம் கேள்விப்பட்டு உள்ளோம். தற்போது அப்படி ஒரு வித்தியாசமான எளிமையான தம்பதிகளை பற்றி தான் பார்க்க போகிறோம்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்த சிவராம் என்பவருக்கும் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை அபிராமி என்பவருக்கும் நேற்று காலை மார்த்தாண்டத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் காரில் ஏறி மார்த்தாண்டம் அருகே உள்ள மணமகன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் மணமகணின் நண்பர்கள் விசாரித்தபோது அரசு பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற வித்தியாசமான ஆசையை மணமக்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து மணக்கோலத்தில் மணமக்கள் இருவரும் பேருந்து நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதன் பின்னர் மார்த்தாண்டம் பகுதியில் இருந்து மாமூட்டுகடை வரை அரசு பேருந்தில் மணமக்கள் பயணம் செய்துள்ளனர். மணக்கோலத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த மணமக்களை சக பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆடம்பரம் வேண்டாம் எளிமை போதும் என்ற மணமக்களின் செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment