
தமிழகம்
கருமுட்டை விற்பனை செய்தால் பயப்படாமல் போலீசுக்கு சொல்லுங்கள்!!!
நம் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறுமி ஒருவரின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் மூன்று பேர் கைதாகியுள்ளனர். மேலும் நேற்றைய தினம் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் சம்மன் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கரு முட்டை விற்பனை தெரிந்தால் போலீசுக்கு தகவல் அளித்தல் வேண்டும் என்று டிஐஜி கூறியுள்ளார். கரு முட்டை விற்பனை குற்றங்களில் ஈடுபடும் மருத்துவமனைகள் குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று டிஐஜி முத்துசாமி கூறியுள்ளார்.
கருமுட்டை விற்பனை தொடர்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று கோவை சரக டிஐஜி முத்துசாமி கூறியுள்ளார். கருமுட்டை விற்பனை குற்றத்தில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் பேட்டியளித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கரு முட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கோவை சரக டிஐஜி முத்துசாமி பேட்டி அளித்தார்.
