Connect with us

“ஆன்லைன் விளையாட்டு ஆபத்து!” ஆப்-களை விலைக்கு வாங்க பெற்றோர் அனுமதிக்காதீர்கள்!!

News

“ஆன்லைன் விளையாட்டு ஆபத்து!” ஆப்-களை விலைக்கு வாங்க பெற்றோர் அனுமதிக்காதீர்கள்!!

1aaf53b52e77cabeaa558c5d8a029bb6

தற்போது நாம் நவீன காலத்தில் வாழ்ந்து வருகிறோம். மேலும் புதுப்புது கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. இதனால் மனிதன் மிகவும் சோம்பேறியாக மாறிவிட்டார் என்றே கூறலாம்.  குழந்தைகள் கூட ஓடி ஆடும் விளையாட்டை மொபைல்போன்லேயே செலவழிக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் மிகவும் ஆபத்து என்று தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.5bd79aafb3e4050d66525929cc6e001c

அதன்படி ஆன்லைன் விளையாட்டிற்கு குழந்தைகள் அடிமையாகாமல் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டு பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் எந்த ஆப்களை பயன்படுத்துகின்றனர்? எந்த ஆப்-ல் அதிக நேரம் செலவிடுகின்றனர்? என்றும் கண்காணிக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

 மாணவர்கள் ஆப் களை விலைக்கு வாங்க பெற்றோர் அனுமதிக்க கூடாது என்றும் பள்ளிக்கல்வித் துறை கூறியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் ஓடிடிபி-களை   பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித் துறை கூறியுள்ளது. செல்போன், கணினி உள்ளிட்டவற்றில் ஆண்டிவைரஸ், ஸ்பைவேர் மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மாணவர்கள் அடல்ட் ஆப் பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்காணித்து அதை தடுக்க உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மத்திய கல்வித்துறையின் உத்தரவை பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் விபரீதம் குறித்து பெற்றோர் ஆசிரியரிடம் கண்டிப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top