பாஸ்மதி அரிசியில் இதை சேர்க்க தடை: எதற்கு தெரியுமா?

பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க உணவு பாதுகாப்பு துறை நிர்ணய ஆணையம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஸ்மதி அரிசி பெருமளவு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயம் பிரியாணி தயாரிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்கள் பாஸ்மதி அரிசியை பயன்படுத்துக்கின்றனர்.

பாஸ்மதி அரிசியில் இதை சேர்க்க தடை: எதற்கு தெரியுமா?

இந்நிலையில் பாசுமதி அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அரிசியில் கலப்படம், அதிக வாசத்திற்காக செயற்கை மணமூட்டிகள் சேர்ப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் உடனடியாக இந்த திட்டம் அமலுக்கு கொண்டுவந்தால் தற்போது இருக்கும் அரிசி பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிவித்துள்ளது.

இதை வேரோடு அழிப்பதே அரசின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மேலும், வரும் காலங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் பாஸ்மதி அரிசிகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் நிகலக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.