திமுகவின் சாதனை-தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு; பழனி எங்கள் கோட்டை!: அண்ணாமலை

அடுத்த வாரம் சனிக்கிழமை நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பரப்புரைகள் காரசாரமாக நிகழ்ந்து கொண்டு வருகிறது. கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தெரு தெருவாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக விதவிதமான முறைகளை அவர்கள் கையாண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சிகள் என பலரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

அதிமுக  கட்சியோடு கூட்டணி வைத்து தற்போது உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ள பாஜக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பழனி தொகுதி பாஜகவின் கோட்டை என்று கூறியுள்ளார். பழனி தொகுதி பாஜகவின் கோட்டையாக உள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

திமுகவின் சாதனை என்று பார்த்தால் பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கியது தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment