Connect with us

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது: திடீரென கமல்ஹாசனின் விமர்சனம் எதனால்?

Tamil Nadu

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது: திடீரென கமல்ஹாசனின் விமர்சனம் எதனால்?

a146e2b08be6fd23f41cfe0058dd6459

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கி 3 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இந்த மூன்று மாதங்களில் கமல்ஹாசன் திமுக அரசை அதிகம் விமர்சனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒருசில விஷயங்களில் அவர் திமுக அரசை பாராட்டியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே 

இந்த நிலையில் திடீரென அவர் இன்று திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பதும் திமுகவும் அதிமுகவும் இந்த விஷயத்தில் ஒன்று தான் என்றும் இந்த அரசும் அஞ்சுகிறது என்பதை புரிந்து கொண்டோம் என்றும் தெரிவித்துள்ளார்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கிராமசபை கூட்டங்கள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த கிராம சபை கூட்டம் நடத்தக் கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. 

அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப்  புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top