Connect with us

‘மின் கட்டணம் உயர்வு’ நம்பி வாக்களித்த மக்களுக்கு திமுக கொடுத்த பரிசு!!

202201211730027644 Tamil News Tamil News Kadambur Raju indictment DMK Govt SECVPF

தமிழகம்

‘மின் கட்டணம் உயர்வு’ நம்பி வாக்களித்த மக்களுக்கு திமுக கொடுத்த பரிசு!!

நேற்றைய தினம் தமிழகத்தில் பெரும் முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படும் என்று மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

மேலும் 8 ஆண்டுகளுக்கு பின்பு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் அறிவித்தார். அதிலும் ஒரு வீட்டிற்கு ஒரு மின்மாற்றி என்ற திட்டம் விரைவில் அமல் படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர். அதிலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசு இத்தகைய உத்தரவினை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.

இது பொதுமக்கள் மீது சுமத்தும் கூடுதல் சுமை என்றும் கூறினார். இந்த நிலையில் அதிமுகவின் எம்எல்ஏ ஒருவர் இது பற்றி பேட்டி அளித்துள்ளார்.

அதன்படி சட்டமன்ற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு அளித்துள்ள பரிசுதான் சொத்து வரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு பேட்டியளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top