Connect with us

வெளியானது திமுகவின் தேர்தல் அறிக்கை! வெளியிடுகிறார் ஸ்டாலின்!

News

வெளியானது திமுகவின் தேர்தல் அறிக்கை! வெளியிடுகிறார் ஸ்டாலின்!

2159dc1fe65ffe2f6dc417ff7f903666

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதன் மத்தியில் திராவிட முன்னேற்றக் கழக சில தினங்களுக்கு முன்பு  வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. தற்போது தனது தேர்தல் அறிக்கையை திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் வெளியிடுகிறார்.

1355a91c46284de2b7165c2c046f2e3e

மேலும் அவர் கூறுகிறார், தேர்தலில் முதல் கதாநாயகனாக வேட்பாளர்கள் வெளியானதை தொடர்ந்து, இரண்டாவது கதாநாயகனாக தேர்தல் வாக்குறுதி வெளியாக உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என கூறினார். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் எனவும் அவர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார் .

எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிராமப்புற பூசாரிகளின் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறுகிறார்.

மசூதிகள் தேவாலயங்கள் சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உதவி தொகையாக ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்த்தப்படும் எனவும் அவர் கூறுகிறார் . ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் எனவும் அவர் கூறுகிறார். இதுபோன்ற 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top