Connect with us

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் கூட்டணி நிலைப்பாடு? காங்கிரஸ் மகிழ்ச்சி!

திமுக- காங்கிரஸ்

தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் கூட்டணி நிலைப்பாடு? காங்கிரஸ் மகிழ்ச்சி!

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் கூட்டணி நிலைப்பாடு? காங்கிரஸ் மகிழ்ச்சி!

தமிழகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியிட்ட பல கட்சிகள் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியிலையே காணப்படுகிறது.

இந்த நிலையில் திமுக காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி நிலைப்பாடு பற்றி தற்போது தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேட்பாளர் தேர்வில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்களுக்கு வாய்ப்பளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எம்பி, எம்எல்ஏ கொண்ட மாவட்டங்களில் அதிக இடங்களை காங்கிரஸ் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது. கட்சிப் பணியில் ஈடுபடுபவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அவர்களிடம் மாவட்டம் வாரியாக நேர்காணல் நடத்தப்பட்டு வார்டு வாரியாக 4 வேட்பாளர்கள் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்விற்கான இறுதிப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது.

அரசின் சாதனைகளை மக்களிடம் வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்களை தருவது பற்றி பரிசீலிப்பதாக திமுக உறுதி தந்தது என்று தமிழ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறினார். பல மாவட்டங்களில் இடப் பங்கீடு தொடர்பாக சுமுகமாக பேச்சுவார்த்தை நடந்தது மகிழ்ச்சி என்றும் அழகிரி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top