ஊரக உள்ளாட்சி தேர்தல்: சற்றுமுன் வரை முன்னிலை நிலவரம்!

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.

இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அதிமுக ஓரளவுக்கு சுமாரான வெற்றி பெற்றுள்ளது என்பதும், பாமக தனித்துப் போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு வார்டு கவுன்சிலர் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிகவுக்கு ஆறுதல் வெற்றியாக ஒரே ஒரு வார்டு கவுன்சிலர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சற்றுமுன் கிடைத்த நிலவரப்படி முன்னிலை நிலவரங்களை தற்போது பார்ப்போம் :

மாவட்ட கவுன்சிலர் பதவிகள்

திமுக 134 முன்னிலை
அதிமுக 3 முன்னிலை
மற்றவை 1 முன்னிலை

ஒன்றிய கவுன்சிலர் பதவிகள்:

திமுக 961 முன்னிலை
அதிமுக 137 முன்னிலை
மற்றவை 109 முன்னிலை

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment