Connect with us

புறவாசல் வழியாக திமுக வெற்றி! வாக்கு எண்ணிக்கையில் தாமதம்!! ஓபிஎஸ்-ஈபிஎஸ்!!!

ஓபிஎஸ் ஈபிஎஸ்

News

புறவாசல் வழியாக திமுக வெற்றி! வாக்கு எண்ணிக்கையில் தாமதம்!! ஓபிஎஸ்-ஈபிஎஸ்!!!

புறவாசல் வழியாக திமுக வெற்றி! வாக்கு எண்ணிக்கையில் தாமதம்!! ஓபிஎஸ்-ஈபிஎஸ்!!!

தற்போது நம் தமிழகத்தில் மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பல பகுதிகளில் திமுகவே வெற்றி பெற்றுள்ளதாக காணப்படுகிறது. திமுக

இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த கொண்டாட்டம் காணப்படுகிறது. மேலும் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியவற்றில் அமோக வெற்றியை திமுக பெற்றுள்ளது.

ஓபிஎஸ்- ஈபிஎஸ்இந்த வெற்றி குறித்து தற்போது எதிர்கட்சியாக உள்ள அதிமுக விமர்சித்துள்ளது. அதன்படி இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றியானது புறவாசல் வழியாக பெற்ற வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி ஆகியோர் கூட்டாக விமர்சித்துள்ளனர்.

மேலும் திமுகவின் புறவாசல் வெற்றியை சட்டத்தின்முன், ஜனநாயகத்தின் முன் நாங்கள் வெளிப்படுத்துவோம் என்றும் அதிமுக தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

அதிமுக மேலும் பல இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்க தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டவில்லை என்றும் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக கூறியுள்ளனர். பல இடங்களில் வாக்கு எண்ணிக்கையை தாமதமாக உள்நோக்கத்தோடு தாமத படுத்தினர் என்றும் அதிமுக கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top