News
திமுக இரண்டாக உடையும்: முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை
அதிமுகவை இரண்டாக உடைக்க ஸ்டாலின் நினைத்தால் திமுக இரண்டாக உடையும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன
மூன்றாவது அணி வரும் தேர்தலில் உருவாகுமா என்ற கேள்வி இருக்கும் நிலையில் இப்போதைக்கு அதிமுக திமுக மட்டுமே தேர்தல் களத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஒரு பக்கம் அதிமுக துணை பொதுச் செயலாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் புயல்வேக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் அதிமுக வை உடைக்க திமுக முயற்சி செய்வதாகவும் குறிப்பாக ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியை பிரிக்க முயற்சிப்பதாகவும் வதந்திகள் எழுந்தன. இதுகுறித்து இன்று கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை உடைக்க ஸ்டாலின் நினைத்தால் திமுக இரண்டாக உடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
