கூட்டணி தர்மத்தை மீறிய திமுக! உடனே ஆக்சன் எடுத்த ஸ்டாலின்!! டி.ஆர். பாலுவுடன் மீட்டிங்;
இன்றைய தினம் தமிழகத்தில் மேயர் மற்றும் நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியினரும் மிகவும் ஆர்வமாக இன்றைய தினத்தை எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் திமுக கூட்டணி கட்சிக்கு இன்றையநாள் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. ஏனென்றால் நேற்றைய தினம் திமுக கட்சி சார்பில் கூட்டணிகளுக்கு பதவி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் இன்றோ கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியில் கூட்டணிக் கட்சியினர் உள்ளனர். அதுவும் குறிப்பாக காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றது பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். அதிகாரப்பூர்வ திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி திமுக வேட்பாளர்கள் களம் இறங்கியது பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
