அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டும் திமுக! அடுத்தவர் குழந்தைக்கு திமுக சொந்தம் கொண்டாட வேண்டாம்: ஈபிஎஸ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து பல புதிய திட்டங்களை அறிவித்து கொண்டு வருகிறார். நம் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இவை நாளைய தினம் திறக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

முன்னதாக அவர் தமிழகத்திற்கு நேரடியாக வந்து திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவர் காணொலி வாயிலாக பதினோரு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பார் என்று அதிகாரபூர்வமான தகவல் வெளியானது.

இதனால் அவர் தமிழகம் வருகை ரத்து ஆனது. இந்த சூழலில் இந்த 11 மருத்துவக் கல்லூரிகள் பற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக என்று கூறியுள்ளார்.

11 மருத்துவக் கல்லூரி உட்பட அதிமுகவின் சாதனை மீது தான்செய்ததாக ஸ்டிக்கர் ஒட்ட திமுக அரசு முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் ஈபிஎஸ் கூறினார். அடுத்தவர் குழந்தைக்கும் சொந்தம் கொண்டாடாமல் செயல் திட்டங்களை திமுக வகுத்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment