திமுகவின் ஓராண்டு கால ஆட்சி நிறைவு; டிடிவி போல பதில் சொன்ன சசிகலா!

நேற்றைய தினத்துடன் நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனால் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓராண்டு காலம் நிறைவு பற்றியும் புதுவிதமான அறிவிப்புகள் பற்றியும் பேசினார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு நேற்றையதினம் ஆளுநர் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார். அதோடு மட்டுமில்லாமல் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஓர் ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டு போனதாக கூறினார்.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனை அல்ல; அது தினம் தினம் மக்களுக்கு வேதனை என்று கூறியிருந்தார்.

இதனை போல் தற்போது சசிகலாவும் கருத்துக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனை அல்ல; வேதனை என்று திருவள்ளூர் அருகே வி கே சசிகலா பேட்டி கொடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment