ஆளுநர் விவகாரம்: ஜனாதிபதியுடன் திமுக பிரதிநிதிகள் சந்திப்பு!!

கடந்த சில நாட்களாகவே தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் திமுக அரசு இடையே முற்போக்கு மோதல்கள் நிலவி வருகிறது. அந்த வகையில் குடியரசு தலைவரை சந்தித்து தமிழக அரசு பிரதிநிதிகள் மனு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 9-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, சில பகுதிகளைத் தவிர்த்தும் சில விஷயங்களை சேர்த்து பேசி இருந்தார். இத்தகைய செயலால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு இருந்தது.

குஷ்பு இட்லி என்ற பெயரில் ரப்பர் இட்லி விற்பனையா? கொந்தளித்த வாடிக்கையாளர்!!

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தமிழக முதல்வர் சட்ட நிபுணர்கள், திமுக சட்டப் பிரிவினர், மூத்த வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்நிலையில் ஆளுநரின் செயல்பாடானது அரசியல் அமைப்பு சட்டத்தின் செயலை மீறக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக ஆளுநர் உரிமையை மீறுவதாக மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப கோளாறு.. அமெரிக்காவில் விமான சேவைகள் பாதிப்பு!!

இதனிடைய தமிழக அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர் பாலு, ஆர்.ராசா. என்.ஆர் இளங்கோவன், எம்.பி வில்சன் உள்ளிட்டோர் குடியரசு தலைவரை சந்தித்து மனுவை நேரில் வழங்கி உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.