News
அதிமுக ஆட்சியின்போது திமுக போராட்டம் நடத்தியது!முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி;
தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திமுக இதற்கு முன்னதாக தமிழகத்தில் பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிமுக.அதிமுக ஆட்சியில் அதிமுகவில் 3 முதலமைச்சர்கள் தமிழகத்தை ஆண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக ஆட்சியின் கடைசி வருடங்களில் முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அவர் மக்களிடையே விவசாய முதல்வராகவும் வலம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இழந்து எதிர்க்கட்சியாக வளர்ந்துள்ளது .
இருப்பினும் அதிமுக சார்பில் பல்வேறு எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று உள்ளார் முந்தைய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அவ்வப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த சில தகவல்களை குறித்து பேட்டி அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியின்போது திமுக போராட்டம் நடத்தியது என்று கூறியுள்ளார்.
அதன்படி கொரோனா உச்சத்தில் இருக்கும் போதே தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் கொரோனா 7000 இருந்தபோது டாஸ்மாக்கை திறந்ததால் திமுக போராட்டம் நடத்தியது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருமுன் வரை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் கட்டுப்படுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதன்மையாக இருந்தது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
