10% இட ஒதுக்கீடு.. மறு சீராய்வு மனு தாக்கல் செய்த திமுக!

10% சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் மசோதா செல்லும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10

பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தவிர்த்து பொருளாதார அடிப்படையாகக் கொண்ட முற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குஉச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் அதில் மூன்று நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும் இரண்டு நீதிபதிகள் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர். இதனை அடுத்து 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்டது

இந்தநிலையில் இந்த நிலையில் தற்போது 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.