News
ராமர் விவகாரம்: ராமதாஸை மறைமுகமாக கிண்டலடித்த திமுக எம்பி

ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும் உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது என்றும் நேபாள பிரதமர் சர்மா ஒலி அவர்கள் நேற்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து ஒரு பக்கம் இந்து மத குருமார்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் தர்மபுரி தொகுதி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: நேபால்_பிரதமரே! இவருடைய பெயரும் அப்படி ஆரம்பிக்கிற காரணத்தினால் இவரும் உங்க நாடுன்னு சொல்லிட போறீங்க., இவர் எங்கள் சொத்து’ என்று கூறியுள்ளார்
திமுக எம்பி செந்தில்குமார், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களை தான் மறைமுகமாக கூறியிருப்பதாக கமெண்ட்டுகளை பதிவு செய்யப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் டுவிட்டர் பயனாளிகள், ‘ஒரு எம்பியாக நடந்து கொள்ளுங்கள் என்றும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்றும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்
