திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது வாழ்க்கை வரலாறு குறித்து, “உங்களில் ஒருவன்” என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய கனிமொழி, புத்தகத்தில் ஒவ்வொரு வரியிலும் கலைஞர் கருணாநிதியைப் பற்றி குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார். “ஆயிரமாயிரம் கண்கள் இருக்கும் இந்த அரங்கில் இதையெல்லாம் பார்த்து பெரிதுவக்கும் 2 கண்களைத் தேடுகிறேன்.“வாழ்க உன் பணி ஸ்டாலின்” என கரகரத்த குரலில் வாழ்த்த அப்பா இங்கில்லையே என நினைக்கும் போது ஆனால், அவரது உடன் பிறப்புகள் அனைவரது முகத்தில் இருக்கு பெருமையிலும், பூரிப்பிலும் பொங்கி வழிகிறது அப்பாவின் அன்பு” என கனிமொழி கூறும் போது அவருக்கு நா தழுதழுக்க பேசியது அனைவரது மனதையும் உருக்கும் விதமாக அமைந்தது.
கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி ஒரு தலைமுறையின் அரசியல் வரலாறு, இளமையின் துள்ளலோடு அரசியல் ஆசான்களை உள்வாங்கி எழுதி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினின் உங்களில் ஒருவன் சுயசரிதை நூல் அரசியல் வரலாறு எனத் தெரிவித்தார்.
'ஆயிரமாயிரம் கண்கள் இருக்கும் இந்த அரங்கில் இதையெல்லாம் பார்த்துப் பெரிதுவக்கும் இரண்டு கண்களை தேடுகிறேன்.
உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் கழக பாராளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழி கருணாநிதி_எம்பி pic.twitter.com/gDSdgPv9mI— Mahalaxmi (@Mahalax80981567) February 28, 2022