Connect with us

12 கோடி வசூல்… திமுக MLA வீட்டில் மாஸ் காட்டிய மொய் விருந்து!!

moivirundhu547 1595999329 1627621479

தமிழகம்

12 கோடி வசூல்… திமுக MLA வீட்டில் மாஸ் காட்டிய மொய் விருந்து!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கலையிழந்த மொய் விருது மீண்டும் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் திமுக எம்.எல்.ஏ அசோக் குமார் இல்ல மொய் விருந்து நடைப்பெற்றது.

இந்நிலையில் 1.5 டன் ஆட்டுக்கறியுடன் தடபுடலாக விருந்து தொடங்கியது. உறவினர்கள் நண்பர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்துகொண்டு மொய் செய்தனர்.

அதேபோல் பணம் என்னும் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். 15 பணம் என்னும் இயந்திரங்களை கொண்டு மொய்பணம் எண்ணப்பட்டது.

இதனிடையே மாலை வரையில் நீட்டித்த மொய்விருந்தில் சுமார் 12 கோடி வசூலானது. இத்தகைய மொய்விருந்தின் மூலம் ஏழைகளுக்கு பல்வேறு வகையில் உதவுவதாக பேராவூரணி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆடு வியாபாரம், மளிகை பொருட்கள் விற்பனை, ஆடு வியாபாரம், பந்தல் காரர்கள் என பலருக்கும் இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் கிடைப்பதாக கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top