இலங்கைக்கு திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் ரூபாய் 1.30 கோடி நன்கொடை!!

கடந்த சில மாதங்களாகவே இலங்கைக்கு இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை செய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக அத்தியாவசிய பொருட்களான அரிசி உள்ளிட்டவற்றையும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை தொடர்ந்து கப்பல் வழியாக இந்திய அரசு வழங்கி கொண்டு வந்தது.

இந்த நிலையில் தமிழக அரசும் இலங்கை மக்களுக்கு உதவிகளை செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைக்கபட்டது. அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து கடிதம் ஒன்று எழுதி இருந்தார்.

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழ் மக்களுக்கு உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின் எதிரொலியாக ரூபாய் 1.30 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளனர்.

ஒரு மாத ஊதியமாக ரூ 1.30 கோடி முதலமைச்சர் ஸ்டாலினிடம் அரசு தலைமை கொறடா கோவி செழியன் வழங்கினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment