Connect with us

கருணாநிதி, ஸ்டாலின் கூட மோடியை சந்தித்தார், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்களா? கு.க.செல்வம்

News

கருணாநிதி, ஸ்டாலின் கூட மோடியை சந்தித்தார், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்களா? கு.க.செல்வம்

bbd863d72cf44200e78618c5a9c07fd1

சமீபத்தில் திமுகவை சேர்ந்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் பாஜக தலைவர்களை சந்தித்ததால் அவர் மீது திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்தது. திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கு.க.செல்வம், கட்சியில் இருந்து ஏன் நிரந்தரமாக நீக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திமுக தலைமை அனுப்பிய நோட்டீசுக்கு தற்போது கு.க.செல்வம் பதில் அளித்துள்ளார். மாற்று கட்சி தலைவர்களை பார்க்கக்கூடாது என்று திமுக விதிகளில் இல்லை என்றும் அப்படிப் பார்த்தால் ஏற்கனவே முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி, தற்போதைய திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் நரேந்திர மோடியை சந்தித்து உள்ளார்கள் என்றும் அப்படியானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் கட்சிக்கு எதிராக தான் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் அவ்வாறு ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவ்வாறு இருக்கும்போது தன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தது தவறு என்றும் அவர் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விளக்கத்தை அடுத்து திமுக தரப்பினர்களிடையே பெரும் பரபர ஏற்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top