கொத்தடிமை கட்சியை விமர்சிக்க தயாராக இல்லை – அதிமுகவை கழுவி ஊற்றிய திமுக அமைச்சர்!

கொத்தடிமை கட்சியான அதிமுகவை பற்றி விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: ஈரோடு சிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுகின்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் கோரிக்கை விடுத்திருந்தார்,அது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை தற்போது தெரியவந்துள்ளது,அது நிறைவேற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஆசை, அதுதான் இந்த அரசின் 22 மாத கால ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி,

விமர்சனங்கள் என்பது தேர்தலுக்கு தேர்தல் எதிர்க்கட்சிகள் வைப்பது தான், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை வாக்காளர்கள் துச்சமான தூக்கி எறிந்து விட்டார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

அதிமுக ஒரு கொத்தடிமை கட்சி,பாஜகவினருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு தான் தேர்தலில் நிற்கிறார்கள்,அடிமை சாசனம் எழுதி கொடுத்த கட்சியை பற்றி நாங்கள் விமர்சனம் செய்ய தயாராக இல்லை,

40 தொகுதிகளிலும் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்து சூழலைத்துள்ளார்,
இதற்காக ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் நாம் விட்டுக் கொடுத்து போக வேண்டும்,மத்தியில் மாற்றத்தை கொண்டு வந்தால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்
.

ஆறுமுகசாமி அறிக்கை குறித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வழக்கில்,அரசு தரப்பு வழக்கறிஞர் அரசினுடைய கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை கமிஷன் தாக்கல் செய்யப்பட்டு ஆறு மாதம் ஆகிறது,பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டது,இப்போது இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இது தேவையற்றது என்று சொல்லியிருக்கார்கள். இடைக்கால தடை தான் தடைபட்டுள்ளது,இந்த வழக்கிலேயே எங்களது ஆழமான கருத்துக்களை எடுத்து வைத்து நிச்சயமாக நாங்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை இந்த வழக்கில் எடுத்துச் சொல்வோம்.

பாஜகவிடம் ஆட்சி இருப்பதால் மிரட்டி பார்க்கலாம் என்று திக தலைவர் வீரமணியை மிரட்டி பார்க்கிறார்கள்,ஆனால் திக தலைவர் வீரமணி போன்றவர்கள் எதற்கும் அஞ்சுபவர்கள் கிடையாது திராவிட இயக்கம் எதற்கும் அஞ்சுகின்ற இயக்கம் கிடையாது எனத் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.