இந்தி திணிப்பு! திமுக பிரமுகர் தற்கொலை.. தமிழக முதல்வர் இரங்கல்!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் இந்தி திணிப்புக்கு எதிர்த்து தெரிவித்து திமுக பிரமுகர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது தாழையூர் பகுதியில் வசித்து வருபவர் தங்கவேல் ( வயது 85). இவர் திமுக வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார். இதற்கிடையில் இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தாக தெரிகிறது.

பிரபல நகைக்கடையில் கொள்ளை: மேலும் 2 பேர் கைது!!

அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்தில் திமுக கிளை அலுவலகத்தின் முன்பு திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதோடு இறப்பதற்கு முன்னர் மோடி அரசே, மத்திய அரசே இந்தியை திணிக்காதே, தாய்மொழி தமிழ் இருக்க கோமாளி மொழி இந்தி எதற்கு என்ற ஒரு வாசகத்தையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் உயிரிழந்த முதியவரின் மரணத்திற்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன் படி, இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கியது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கனவில் வந்த பாம்பு!! விவசாயின் நாக்கை கடித்த விபரீதம்..!!

அதோடு தாழையூர் தங்கவேலு அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக தனது டுவிட்டர் பகத்தில் தெரிவித்து உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.